தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர். தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து பாட்சா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனிடையே கிரிக்கெட் வீரர் கங்குலியை ரகசியமாக காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்கள். அதன் பின் அரசியலில் குதித்த அவர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.
தற்போது 48 வயதாகும் நக்மா திருமணம் செய்துக்கொள்ளாமல் திரைப்படங்களில் கூட நடிக்காமல் தன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திருணம் செய்துக்கொள்ளாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எனக்கு திருமணம் செய்யவே கூடாது என்பதெல்லாம் எண்ணமில்லை. சொல்லப்போனால் திருமணம் செய்துக்கொண்டு குடும்பம், குழந்தைகள் என வாழ ஆசையாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அப்படி ஏதாவது நடக்குதா என்று…. இருந்தும் திருமணம் செய்துக்கொள்ளாமலே நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். சந்தோஷம் என் வாழ்க்கையில் குறைவில்லாமல் இருக்கிறது என அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.