நயன்தாராவின் காதலன் வெளியிட்ட “காத்துவாக்குல ரெண்டு காதல்” பட போஸ்டர்…!

14 February 2020, 1:51 pm
Quick Share

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவன் இறுதியாக நடிகர் சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தை இயக்கினார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்குப்பிறகு இவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் “காதுவாக்குல ரெண்டு காதல்”.


இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா அக்கினேனி ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஒரே படத்தில் விஜய் சேதுபோது நயன்தாராவையும் சமந்தாவையும் காதலிக்கும் இந்த படத்தை லலித் குமார் என்பவர் தயாரிக்கவுள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையளிக்கவுள்ளார்.


சமந்தாவை தவிர இந்த கூட்டணி இதற்கு முன் “நானும் ரவுடி தான்” என்னும் படத்தில் பணியாற்றினர். வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜயின் “மாஸ்டர்” படத்தில் வில்லனாகவும் இயக்குனர் மணிகண்டனின் “கடைசி விவசாயியாகவும்” நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply