நடிகை டாப்ஸி பன்னு உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..!

3 March 2021, 2:29 pm
Anurag_Taapsee_UpdateNews360
Quick Share

பாலிவுட் திரை நட்சத்திரங்களான அனுராக் காஷ்யப், விகாஸ் பஹ்ல், நடிகை டாப்ஸி பன்னு மற்றும் மும்பையில் வசிக்கும் பலருடைய வீடுகளில் வருமான வரித்துறை இன்று சோதனை செய்துள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பான ஆதாரம் கிடைத்ததையடுத்தது இந்த சோதனை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

மோசடி தொடர்பாக மும்பை, புனே மற்றும் பாண்டம் பிலிம்ஸ் வளாகம் உட்பட பல இடங்களில் 22’க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை தேடல்களை மேற்கொண்டன. திரைப்படத் தயாரிப்பாளர் மது மந்தேனாவின் குடியிருப்பு மற்றும் அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்துள்ளது.

குவான் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பின்னர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், திரைப்பட தயாரிப்பாளர் விக்ரமாதித்யா மோட்வானே பாண்டம் பிலிம்ஸின் ஒரு பகுதியாக இருந்ததால் அவரது இல்லத்தில் ஒரு சோதனையை எதிர்கொண்டார்.

அனுராக் காஷ்யப், விகாஸ் பஹ்ல் மற்றும் டாப்ஸி பன்னு ஆகியோர் சமூக ஊடக தளங்களில் பொதுப்பிரச்சினைகள் குறித்து சர்ச்சையாக பேசி வருகின்றனர். மேலும் விவசாயிகளின் எதிர்ப்பு குறித்தும் தங்கள் கவலையை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பாண்டம் பிலிம்ஸ் அனுராக் காஷ்யப், இயக்குனர் விக்ரமாதித்யா மோட்வானே, தயாரிப்பாளர் மது மந்தேனா மற்றும் யுடிவி ஸ்பாட்பாய் விகாஸ் பஹ்ல் ஆகியோரால் நிறுவப்பட்டது. ஹசி டோ ஃபாஸி, ஷாண்டார் போன்ற படங்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டன.

முன்னாள் பாண்டம் ஊழியரால் இயக்குனர் விகாஸ் பஹ்லுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் வெளிவந்ததை அடுத்து, 2018’ஆம் ஆண்டில் நிறுவனம் மூடப்பட்டது. தற்போது அங்கு அனுராக் காஷ்யப் அங்கு தனது குட் பேட் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 78

0

0