இந்தியன் 2; விமர்சனங்களை தகர்த்து அள்ளிக் குவித்த வசூல்; சூப்பர் அப்டேட்,..
Author: Sudha13 ஜூலை 2024, 12:20 மணி
ஷங்கர் இயக்கத்தில்,கமல்ஹாசன் நடிப்பில் சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்த இந்தியன் 2′ படம் நேற்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்திற்கு நேற்று நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவந்தன
படத்தின் நீளம் மூன்று மணி நேரம், படம் போர் அடிக்குமோ என்று பலரும் பேசினார்கள். ஆனாலும் படத்தைப் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் குறையவில்லை. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் முன்பதிவும் சிறப்பாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது.
நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் உலக அளவில் சுமார் 60 கோடி வந்திருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. வார இறுதி வசூல் 200 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களுக்கு வேறு பெரிய படம் எதுவும் வரவில்லை என்பதால் வசூல் பாதிப்பு இருக்காது என்றும் திரை வட்டாரம் சொல்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.
சில விஷயங்களை படத்தில் தவிர்த்திருந்தால் இன்னும் பெரிய அளவில் வசூலைக் குவித்திருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
0
0