இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பல பெண்கள் பிரபலம் ஆனது உண்டு. அந்த வரிசையில் இன்ஸ்டாவில் இடைவிடாது ரீல்ஸ் செய்து பிரபலமானவர்கள்தான் கனி, சக்தி ஆகிய இரு சகோதரிகளும். கனி மற்றும் சக்தி ஆகிய இருவரும் இணைந்து செய்யும் பல ரீல்கள் வைரலான நிலையில் இன்ஸ்டாவாசிகள் பலருக்கும் பரிச்சயமானவர்களாக ஆனார்கள். இவர்கள் தொடர்ந்து பல பேட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது கனி கூறிய ஒரு விஷயம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
“தனுஷ் சார் படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். அது ஒரு சின்ன கதாபாத்திரம்தான். அதன் பின் சிவகார்த்திகேயன் படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். மேலும் தளபதி 69 படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடிக்க அழைத்தார்கள். ஆனால் நான் அதை எல்லாம் மறுத்துவிட்டேன். எனக்கு எதிலும் ஆர்வம் இல்லை.
பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும் என்றால், ஆமா இவள் பெரிய இவ, என்றுதான் சொல்ல தோன்றும், ஆனால் என்னுடைய இடத்தில் இருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும். என்னுடைய அப்பாவிற்கு இது எல்லாம் பிடிக்காது.
நாங்கள் ரீல்ஸ் போடத் துவங்கிய போது கூட அவரிடம் புரிய வைத்துதான் எல்லாம் செய்தோம். ஆதலால் அவர் சினிமாவிற்கெல்லாம் அனுமதித்திருக்க மாட்டார்” என கனி அப்பேட்டியில் கூறியிருந்தார்.
இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில், “ரீல் விடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு”, “உருட்டு உருட்டு” போன்ற கம்மண்ட்டுகளால் இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தன் மீதும் தலைவர் அண்ணாமலை அவர்கள் மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் மீடியாக்கள் மற்றும் சமூக மீடியாக்கள் மீது நடவடிக்கை…
அதிக வரவேற்பை பெற்ற பீல் குட் திரைப்படம் கடந்த மே மாதம் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான “டூரிஸ்ட்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த குரும்பூர் கடைவீதி பகுதியில் நேற்று இரவு சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட புல்லிங்கோ பாய்ஸ் பிறந்தநாள்…
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. புதிய தலைமை நிலைய குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
This website uses cookies.