2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.
இந்நிலையில், சினேகாவின் சினிமா பயணம் குறித்த சில தகவல்களை செய்யாறு பாலு பகிர்ந்து உள்ளார். மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்த சுசிகணேஷன் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் ஹீரோவாக ஒப்பந்தமாகி புதுமுக ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று, வார பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கப்பட்ட நிலையில், சினேகா அந்த பத்திரிக்கைக்கு புகைப்படத்தை அனுப்பியதை அடுத்து, சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர், படம் வெளியான பின் அவருக்கு நல்ல பெயர் கிடைத்து குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சினேகா எந்த அளவிற்கு பிரபலமானாரோ அந்த அளவிற்கு கிசுகிசு, சர்ச்சையில் சிக்கியது அனைவரும் அறிந்த ஒன்று.
இதனிடையே, புதுப்பேட்டை படத்தில் ஒரு விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன் என்று அழுத போது தனுஷ் அவருக்கு ஆறுதல் தெரிவித்து, இந்த கதாபாத்திரம் ரொம்ப நல்ல பெயர் வாங்கித் தரும் என்றார். எனவே, அதே போல அந்த படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது எனத் கூறி உள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.