ஒரு குடும்பம் அழுதுட்டு இருக்கு… நீ இப்புடி தின்னுட்டு இருக்குற – கார் விபத்துக்கு பின் இர்பான் வெளியிட்ட வீடியோ – கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார்.

சில மாதங்களுக்கு முன்னர் இர்பானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்று இவருடைய நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள்.

அதையடுத்து இவர்களுக்கு அண்மையில் பிரம்மாண்டமாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பானின் பென்ஸ் கார் மோதி பத்மாவதி என்ற பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது காரை ஓட்டி வந்தது இர்பானின் ட்ரைவர் அசாருதீன் என்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து அசாருதீன் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீசார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து உண்மையில் காரை ஒட்டி வந்தது அசாருதீன் தானா? என சிசிடிவி காட்சி கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தில் இர்ஃபானை பார்த்ததாக போலீசாரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். எனவே காரை ஓட்டிவந்து விபத்துக்குள்ளாக்கிவிட்டு இர்பான் எஸ்கேப் ஆகிவிட்டாரா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் நடந்த சில நாட்களிலேயே தற்போது இர்பான் food vlog வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் அவரை மோசமாக திட்டி தீர்த்துள்ளனர். கார் விபத்திற்கு பின்னர் அதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் எந்த ஒரு பதிவும் அல்லது வீடியோவும் பதிவிடாத இர்பான் எதுவுமே நடக்காதது போன்று food vlog வெளியிட்டிருப்பது பார்த்து கோபம் அடைந்துள்ளனர். உங்களுக்கு சொந்தமான கார் மோதி ஒருவர் உயிரிழந்து விட்டார் அதைப்பற்றி எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இப்படி வீடியோ பதிவிட்டிருக்கிறீர்களே என்று கேள்வி எழுப்பி ஆளாளுக்கு திட்டியுள்ளனர்.

https://www.instagram.com/reel/Cs0MZ6fud0f/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Ramya Shree

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

13 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

14 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

14 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

14 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

15 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

16 hours ago

This website uses cookies.