பிக் பாஸ் ஆரவ்வா இது? சிக்ஸ் பேக்குடன் முரட்டுத்தமான மிரட்டல் போட்டோஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 5:51 pm

பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான சைத்தான் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாகர்கோவிலை பூர்விமாக கொண்ட இவர் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் சிறு வேடத்தில் தோன்றியிருந்தார்.

இவருக்கு பெரிய கம்பேக் காக கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். அதன் பின்னர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதன் பின்னர் சினிமாவில் இவர் பெரிய ரவுண்ட் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெளியான மார்கெட் ராஜா, மார்க்கெட்டில் வந்த வேகத்தில் வெளியேறியது. இருப்பினும் அடுத்தடுத்து படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆரவ், தற்போது முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.

சிக்ஸ் பேக்குடன் இவர் வெளியிட்ட போட்டோக்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கடின உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என அவர் ரசிகர்கள் ஆதரவாக பேசி வருகின்றனர்.

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 1672

    0

    0