மணிரத்னத்தை கிண்டல் செய்யும் திரெளபதி பட இயக்குனர்…!

7 August 2020, 6:15 pm
Quick Share

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒருசிலர், அதே தினத்தில் ராவணனை போற்றி பல கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்தனர்.

ராவணன் சிறந்த சிவபக்தன் என்றும் தமிழ் தேசத்தின் பெருமைக்குரியவர் என்றும் ராவணனை கொண்டாடி வந்தனர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் தனது டுவிட்டரில் இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: அடுத்தவன் வீட்டு பெண்களை ஆள் இல்லாதப்ப தூக்கிட்டு போறவனை கொண்டாடுறதும்,

அந்த வகையறா நாங்க அப்படின்னு பெருமையா பேசுறது எல்லாம் வேற லெவல் ப்ரோ.. வேற வேற லெவல்.. கலக்குங்க ப்ரோ.. என்று பதிவு செய்துள்ளார். மேலும் அவர் மணிரத்தினம் இயக்கிய இயக்கிய ’ராவணன்’ படத்தின் ஸ்டில் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது சர்ச்சைக்குள்ளாகி எல்லா நடிகர்களும் மோகனை தாக்குகின்றனர்.

Views: - 1

0

0