25 லட்சம் வாங்கினேனா? குக் வித் கோமாளி புகழ் பதில்

Author: Udhayakumar Raman
7 September 2021, 5:48 pm
Quick Share

விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. அந்த வகையில் திவ்யதர்ஷினி, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மிக பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா 2 பேருமே கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். இப்போது புகழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். அமேசான் ப்ரைமில் வெளியான LOL நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் புகழ்.

இந்நிலையில் தனியார் கடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். சந்தானம் அண்ணனுடன் 2 படங்கள் நடித்துள்ளேன். அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறேன். அனைவரும் மகிழ்விப்பதற்கு மாதிரியான படங்களில்தான் நடித்துள்ளேன். LOL என்ற ‘எங்க சிரி பார்ப்போம்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றேன். அந்தப் பரிசுத் தொகையை இருவருக்குப் பிரித்துக் கொடுத்தார்கள்.

மொத்த பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தில் எனக்கு ரூ.12.5 லட்சம் வந்தது. அதில் டி.டி.எஸ் பிடித்ததுப் போக மீதி ரூ.7 லட்சம்தான் வந்தது. அனைத்துச் செய்திகளிலும் ரூ.25 லட்சம் ஜெயித்தேன் என சொல்கிறார்கள். ஆனால் என் கைக்கு வந்தது ரூ. 7 லட்சம் மட்டும் தான். அதையுமே ஊரில் வீடு கட்டக் கொடுத்துவிட்டேன். பிக்பாஸில் கலந்துகொள்ள போறீர்களா என்ற கேள்விக்கு பிக் பாஸ் வீட்டிற்கு எல்லாம் செல்லவில்லை என்று கூறினார்.

Views: - 264

4

1