சிம்புவும் பிஸி.. கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘அந்த’ நடிகர்தான் தொகுப்பாளர்..!
Author: Vignesh7 August 2024, 9:46 am
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 சீசன்களை சல்மான் கான் தொகுத்து வழங்கிய நிலையில், 7 சீசன்களோடு ஆள விடுங்கப்பா சாமி என கமலஹாசன் நைசாக கழண்டு கொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கமலஹாசன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கூட ரம்யா கிருஷ்ணன் ஒரு எபிசோடை தொகுத்து வழங்கினார். கமலஹாசன் வரும் சீசனை தொகுத்து வழங்கப் போவதில்லை என்று அடுத்து சிம்பு தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் இருந்தது. ஆனால், அவரும் தக் லைஃப் மற்றும் எஸ்டிஆர் 48 உள்ளிட்ட படங்களில் பிஸியாக உள்ளார்.
அதனால், ரம்யா கிருஷ்ணன் அல்லது சரத்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இவர்களை தவிர ஒரு நபர் வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால், நன்றாக இருக்கும் என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
கமலஹாசன் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே புது ஹோஸ்ட் ரெடியாகி இருப்பார் என்றும், பிக் பாஸ் ப்ரோமோ விரைவில் நடைபெற உள்ளதாகவும், தகவல்கள் கசிந்து உள்ளது. கூடிய சீக்கிரமே அடுத்த ஹோஸ்ட் யார் என்கிற அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என்றும், இந்த வருடம் போட்டியாளர்கள் லிஸ்ட்டிலும் விஜய் டிவி கவனம் செலுத்தி கமல்ஹாசன் இல்லாத இடத்தை நிரப்ப நிகழ்ச்சியில் அதிக கவனத்தை செலுத்தும் என்கின்றனர்.
0
0