பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தானாகவே காரை ஓட்டிச்சென்று வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பாரம்பரிய முறைப்படி உறவினர்கள் முன்னைலையில் உடல் தகனம் செய்தனர்.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து TRP’யில் முதல் இடத்திலும் சமூகவலைகளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்த மாரிமுத்து இறந்துவிட்டதால் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்பது குறித்த சமீபத்திய தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதன் படி அடுத்த குணசேகரனாக பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகியது. ஆனால் அது உண்மை இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மாறாக ஆதி குணசேகரனாக பிரபல நடிகர் பசுபதி நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. நடிகர் பசுபதி மிகச்சிறந்த வில்லன் அவர் இந்த ரோலுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என மக்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.