மறுக்கா மறுக்கா வில்லன் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி?

22 January 2021, 3:29 pm
Quick Share

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லான விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு 5க்கும் அதிகமான படங்களில் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்ட, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், மார்கோனி மதை, சைரா நரசிம்ஹா ரெட்டி, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து அதனை வெளியிட்டுள்ளார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கக்கூடியவர். ஹீரோவாக மட்டுமல்லாமல், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், திருநங்கை கதாபாத்திரம் என்று பல அவதாரம் எடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அண்மையில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். பவானி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் சலார் என்ற புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும்,

ஆனால், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜிஎஃப் 2 படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து சலார் என்ற புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை கேஜிஎஃப் படங்களை தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் படப்பூஜை முடிந்து, முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் தான் பிரபாஸ்க்கு வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல ரெண்டு காதல், மும்பைகார், இடம் பொருள் ஏவல் என்று பல படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0