பல 90ஸ் கிட்களின் வாழ்வியலில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்த ஹீரோ என்றால் அது ஜாக்கி சான்தான். அதிரடி ஆக்சன் நாயகனாக பல திரைப்படங்களில் கலக்கிய ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தமிழ்நாட்டில் அவரது திரைப்படங்களை ரசித்து பார்த்தவர்கள் பல பேர் உண்டு.
அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் தமிழ் டப்பிங்கில் ஒளிபரப்பாகும் ஜாக்கி சான் திரைப்படத்திற்கு ஒவ்வொரு வாரமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்து அத்திரைப்படங்களை ரசித்து பார்த்தவர்கள் பலர் உண்டு.
ஜாக்கி சானுக்கு தற்போது 71 வயது ஆகி வரும் நிலையில் “கராத்தே கிட்:லெஜண்ட்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஜாக்கி சான் தனது குடும்பத்தை குறித்த ரகசியத்தை பற்றி பல அதிர்ச்சியான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
“எனது தந்தை ஒரு சீன உளவாளி என்பதை எனது 40 ஆவது வயதில் தெரிந்துகொண்டேன். அந்த சமயத்தில் ஒரு நாள் நானும் எனது தந்தையும் காரில் சென்றுகொண்டிருந்த சமயத்தில் ‘மகனே, எனக்கு வயதாகிவிட்டது. நான் எப்போது வேண்டுமானாலும் மரணத்தை தழுவலாம். உன்னிடம் ஒரு ரகசியத்தை கூற வேண்டும். உன்னுடைய பெயர் ஜாக்கி சான் அல்ல. உன்னுடைய உண்மையான பெயர் Fang’ என்று என்னிடம் கூறினார். அதனை கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என அப்பேட்டியில் ஜாக்கி சான் பகிர்ந்துகொண்டுள்ளார். ஜாக்கி சானின் இப்பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.