ரசிகர்களின் ‘பர்த்டே’ வாழ்த்து மழையில் நனையும் ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!

11 August 2020, 11:19 am
Quick Share

பாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்தி திரைப்படங்களில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #HappyBirthdayJacquelineFernandez என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் டிரெணட் செய்து வருகின்றனர்.

முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா யுனிவேர்சான ஜாக்குலின் கடந்த, 2009-ஆம் ஆண்டு அலாதீன் என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பன்னாட்டு இந்திய ஃபிலிம் அகாதமி விருதினை கடந்த 2010-ஆம் ஆண்டில் வெற்றார்.

தொடர்ந்து, பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு, பாலிவுட் ரசிகர்கள் மட்டும் இன்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகளும் ட்விட்டரில் தங்கள் வாழ்த்துக்களை கெரிவித்து வருகின்றனர். மேலும், இவரின் பிறந்த நாளையொட்டி பாலிவுட் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 61

0

0