ஜகமே தந்திரம் “புஜ்ஜி” வீடியோ பாடல் ! தனுஷ் ஆட்டம், வெறியாட்டம்….!

13 November 2020, 11:00 am
Quick Share

கடைசியாக இந்த பொங்கல் வெளியீடான பட்டாசு படத்தில் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடங்களில் நடித்த நடிகர் தனுஷ், தற்போது கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து புஜ்ஜி என்னும் செம்ம மாஸான Romantic பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிய “ரகிட ரகிட ரகிட” படத்தின் பாடல் இன்னும் ஓயாமல் இருக்க தற்போது இந்த புஜ்ஜி பாடலும் ஒவ்வொரு ரசிகரின் உதட்டிலும் முணுமுணுக்க வைக்கும். அனிருத்துடன் குரலில், தனுஷோட ஆட்டத்தில் தீயாக வந்திருக்கிறது இந்த பாடல்.

ஜகமே தந்திரம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் சந்தோஷ் நாராயணனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜேம்ஸ், கலையரசன், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

Views: - 26

0

0