Leak ஆன “ரகிட ரகிட” வீடியோ பாடல் – ரசிகர்கள் கொண்டாட்டம்….!

Author: Udhayakumar Raman
15 March 2021, 6:44 pm
Quick Share

கடைசியாக 2020 பொங்கல் வெளியீடான பட்டாசு படத்தில் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடங்களில் நடித்த நடிகர் தனுஷ், தற்போது கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தநிலையில் செம மாஸ் ஆன ஜகமே தந்திரம் படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது.

ஏற்கனவே ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிய ரகிட ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி பாடல்கள் இன்னும் ஓயாமல் இருக்க தற்போது ரகிட ரகிட வீடியோ பாடலின் சில நொடி காட்சிகள் லீக் ஆகியுள்ளது . இதனால் ரசிகர்கள் பயங்கர குஷியாகி இந்த வீடியோவை வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.

ஜகமே தந்திரம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் சந்தோஷ் நாராயணனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜேம்ஸ், கலையரசன், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் Netflix OTT – யில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக Teaser மூலமாக அறிவித்து விட்டார்கள்.

Views: - 247

2

0