இளையராஜா ஒரு மட்டமான ஆள் – ஆன்மீகத்தில் அரவேக்காடு – கிழி கிழின்னு கிழித்த பிரபலம்!

Author: Shree
23 March 2023, 10:47 am
inayaraja dp
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். அப்படித்தான் தற்போது இளையராஜா ஒரு மட்டமான மனிதன் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், இசையமைப்பாளரின் இசையை குறித்து மணிக்கணக்காக பெருமையாக பேசுவேன். ஆனால் ஒரு மனிதனாக மகா மட்டமானவர். ஆன்மீகதிற்குள் நிறைய விஷயத்தை பேசும் இளையராஜாவுக்கு பெருந்தன்மை, முதிர்ச்சி, சகிப்பு தன்மை , பொறுமை , புரிந்துக்கொள்ளுதல் இது எதுவுமே அவருக்கு கிடையாது. ஆன்மீகத்திற்கு உள்ளே போகிறேன் என சொல்லிவிட்டு வெளியில் அசிங்கமாக பேசுவது நல்லா இல்லை என்ற கூறினார்.

இளையராஜா தற்பெருமை கொண்ட மனிதர் தான் இவர் சொல்வது எல்லாம் உண்மைதான் இதற்கு உதாரணமாக எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களை இளையராஜா அவர்கள் தம்பி கங்கை அமரன் அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். இளையராஜா தான் நினைப்பதுதான் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அது தவறான விஷயம் கற்றது கையளவு கல்லாதது உலகளவு இதை இளையராஜா அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீகம் உள்ளவரிடம் பணிவு அடக்கம் இருக்கவேண்டும். ஆணவம் தலைகனம் இருக்ககூடாது. அவரது இசை நாள் முழுக்க கேக்கலாம் அவரது பேச்சை ஒரு நிமிசம் கூட கேக்க முடியாது இது உண்மை. மிகவும் சிறப்பான துணிச்சலான பதிவு. வசந்த் அவர்களுக்கு வாழ்த்து. இளையராஜாவின் மட்டமான புத்தியை எதார்த்தமாக தெரிவிக்கிறார். என ஜேம்ஸ் வசந்த் வார்த்தைக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

Views: - 900

54

17