வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி? 

Author: Prasad
20 June 2025, 6:25 pm

விஜய்யின் கடைசி படம்

விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

வெறித்தனமான அப்டேட்

இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வருடம் “ஜனநாயகன்” குறித்து எந்த அப்டேட்டும் வெளிவராது என கூறப்பட்டது. எனினும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது ஒரு வெறித்தனமான அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு “The First Roar” என்று பெயர் வைத்துள்ளனர். 

  • Fahadh faasil said no to coolie movie  எனக்கு இந்த ரோல் வேண்டாம், Bye- லோகேஷ் பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்த ஃபகத் ஃபாசில்?