நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட மதுரையில் தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அதில் பாஜக, திமுக போன்ற கட்சிகளை மிக கடுமையாக அவர் விமர்சித்திருந்தது பேசுபொருளானது. மேலும் முதல்வர் முக ஸ்டாலினை விஜய், அங்கிள் என அழைத்தது விமர்சனத்திற்குள்ளானது.
இந்த நிலையில் விஜய்யின் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை குறித்தான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இத்திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மமிதா பைஜு, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் ஆகியோர் இத்திரைப்படத்தில் கேமியோ செய்கிறார்களாம்.
இந்த நிலையில்தான் “ஜனநாயகன்” திரைப்படத்தில் விஜய்யின் இன்ட்ரோ காட்சி குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதன் முதல் காட்சி ஜெயிலுக்குள் இடம்பெறவுள்ளதாம். ஜெயிலுக்குள் எம்ஜிஆரின் வரைப்படம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது. அதை காட்டுகிறார்கள்.
அப்படியே கேமராவை பேன் செய்து விஜய்யை காட்டுகிறார்களாம். இவ்வாறுதான் இத்திரைப்படத்தின் இன்ட்ரோ காட்சி அமையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற மதுரை மாநாட்டில் கூட எம்ஜிஆரின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.