தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்,அதுவும் இப்போ இருக்க கூடிய பெண்கள் இவர்களுடைய பாடலுக்கு தீவிர அடிமையாகி,அவர்களை ஒருதலையாக காதலித்தும் வருகின்றனர்.
இதையும் படியுங்க: உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!
இந்த நிலையில் இந்த குழுவை சேர்ந்த ஜின்னுக்கு அவரது அனுமதியின்றி முத்தம் கொடுத்த,ஜப்பான் நாட்டு பெண்ணை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கிழக்காசிய நாடான தென்கொரியாவில் 2013 ஆம் ஆண்டு இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த இசைக்குழு உலகம் முழுவதும் ஏகப்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலம் ஆனார்கள்,இவர்களுக்கென்று பல ஊர்களில் BTS ஆர்மி என ஒரு கும்பலே சுற்றிக்கொண்டிருக்கிறது.
தென் கொரியாவில் 18வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 18 மாத கட்டாயம் ராணுவ பயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அந்த நட்டோடைய விதிமுறை,அதன்படி கடந்த ஆண்டு ஜின் இந்த ராணுவ பயிற்சியை முடித்தார்,இந்த நிகழ்ச்சியையும்,11 ஆம் ஆண்டு BTS நிறைவு விழாவையும் கொண்டாடும் விதமாக சியோலில் அவர் ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென அவர் பக்கத்தில் சென்று ஜின்னை கட்டி பிடித்து கழுத்தில் முத்தம் கொடுத்தார்.ஜின் இதை ரசிக்கவில்லை,இதனால் ஜின் தரப்பில் இருந்து ஆன்லைன் வாயிலாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அந்த பெண் யார் என்று தேடிய போது,அவர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது,போலீசார் அவர் மீது பாலியல் தொந்தரவு வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மனும் அனுப்பியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.