பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஷோபிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷோபிதா. அவர் இப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதைப்படி பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடி இவர் தான். இப்படத்துக்கு பின்னர் நடிகை ஷோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
சமீபத்தில் இவர் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். அதன்படி நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவுடன் ஷோபிதா அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இருவரும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஷோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அது அவரது திருமண புகைப்படங்கள் இல்லையாம். அது விளம்பரத்திற்காக அவர் பதிவிட்ட பதிவாம்.
இந்த புகைப்படங்களைப் பார்த்ததும் ஷோபிதாவிற்கு நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டது என்று எண்ணியதாக அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ நாக சைதன்யாவை எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என கேட்டு அவரை கிண்டலடித்து வருந்தனர்.
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னுடைய கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பின் போது சோபித்த ஜெயம் ரவி கேரவனில் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜெயம் ரவி குடுத்து வைத்தவர் என கிண்டலாக தெரிவித்து வருகின்றனர். நடிகையுடன் தனிமையில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்க மனைவி கோபடமாட்டாங்களா ? என்றும் கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.
சிலர், உங்களுக்கு வேற வேலையே இல்லையா ஏன் அடுத்தவர் குடும்பத்தில் இப்படி கும்மி அடிக்கிற என்று கருத்துகளை பகிர்ந்தும் வருகின்றனர். ஆக மொத்தம் இவர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதை சர்ச்சையாக்கி வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.