“தனிமையில் இனிமை காண்கிறேன்”… விவாகரத்து சர்ச்சைக்கு பின் சிங்கிளா ட்ரிப் அடித்த ஜெயம் ரவி!

Author:
8 ஆகஸ்ட் 2024, 7:43 மணி
jeyam ravi
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து வைத்திருக்கிறார் .

jeyam ravi

இதனிடையே பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்த என்பவரை ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் , அயான் என இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து விட்டதாக சர்ச்சை கிளம்பியது . இது பெரும் பூதாகரமாக வெடித்தது.

இந்த விவாகரத்துக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது அவர் மாமியார் தான் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், ஜெயம் ரவி தன்னுடைய மாமியாரின் தயாரிப்பில் கடைசியாக சைரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக இவர்களது விவாகரத்து விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

jeyam ravi

இவர்கள் இருவரும் அது குறித்து எதுவுமே கூறாமல் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் ஜெயம் ரவி தனது விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு தனிமையில் கோவாவிற்கு ட்ரிப் அடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அவர் இந்த ட்ரிப்பை என்ஜாய் செய்து வருவதாக கூறப்படுகிறது.

எப்போதும் தனது மனைவியுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜெயம் ரவி ஏன் இப்படி தனிமையில் செல்கிறார் என்ற கேள்வி தான் தற்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. இதனால் விவாகரத்து உண்மைதானா? “தனிமையிலே இனிமை காண ஆரம்பித்து விட்டாரா ஜெயம் ரவி?” என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 232

    0

    0