அந்த படத்தின் அதர பாதாள தோல்வியில் இருந்து தப்பித்த சூர்யா ! Escape Great Escape !

23 November 2020, 6:20 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்ட சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஹிட் என சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் அமையவில்லை என வருத்தத்தில் இருந்தார் அதை தவிடுபொடி ஆக்கி விதத்தில் சூரரை போற்று பெரிய வெற்றி அடைந்துள்ளது.

வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகர் சூர்யா எட்டு வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் எட்டு வருடங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சூர்யா தான்.

இந்த தகவலை அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆன தனஞ்ஜெயன் அவர்கள் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார். மிஷ்கின் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார் எனவும் கூறியிருந்தார்.

நல்லவேளை அந்த படத்தில் நடித்திருந்தால் இன்று ஜீவாவிற்கு என்ன நேர்ந்ததோ அதே தான் சூர்யாவிற்கும் நேர்ந்திருக்கும்.

Views: - 1

0

0