பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
மாதம்பட்டி ரங்கராஜுடன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா, தான் 6 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்தது.
மாதம்பட்டி ரங்கராஜ்ஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் அவரிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறாமல் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாகவும் தன்னுடன் அவர் வாழ மறுப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜாய் கிரிஸில்டா, “மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள்தான் எனது குழந்தைக்கு அப்பா. அவர் எனது குழந்தைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இருவரும் ஒன்றாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.
அவர் தனது முதல் மனைவியுடன் சட்ட ரீதியாக பிரிந்து இருக்கிறேன் என கூறினார். அதனை நம்பித்தான் நான் அவரை திருமணம் செய்துகொண்டேன். கடந்த ஒன்றரை மாதங்களாக அவரை தொடர்புகொள்ளவோ அல்லது சந்திக்கவோ முடியவில்லை.
கடைசியாக அவரை ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்தேன். ஆனால் அவர் பேச தயாராக இல்லை. நான் பேச முயற்சி செய்தபோது அவர் என்னை அடித்துவிட்டார். எல்லோர் முன்னிலையிலும் என்னை தாக்கினார்” என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட ஒரு பத்திரிக்கையாளர், “குழந்தையை கலைச்சிருக்காங்களா?” என கேட்டதற்கு “அதெல்லாம் நடந்திருக்கிறது” என கூறி தனது பேட்டியை முடித்துக்கொண்டார். ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.