தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஹீரோவான சூர்யாவின் நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு சூர்யா ஓவராக ஹைப் கிளப்பிவிட்டார் .
குறிப்பாக இந்த படம் ரூ. 2000 கோடி வசூல் ஈட்டும் என்றெல்லாம் பேசி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்ட சூர்யா பின்னர் அதனால் மிக மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறார். இந்த திரைப்படம் இரைச்சலாக இருப்பதாகவும் அரை மணி நேரத்திலே காது வலியோடு வெளியில் ஓடி வந்ததாக பலர் மோசமாக விமர்சனங்களை தெரிவித்து வந்தார்கள் .
இதனிடையே ஜோதிகா சூர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் படத்திற்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தது மேலும் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. ஏற்கனவே கங்குவா படம் இறங்கிப் போய்விட்டது. இதில் ஜோதிகா தன் பங்கிற்கு படத்தை மேலும் இறக்கிவிட இப்படி எல்லாம் பேசுகிறார் . அமைதியாக வாய மூடிக் கொண்டிருந்தாலே அது பாட்டுக்கு அமைதியாகிவிடும் .
பிரச்சனையை சரி செய்கிறேன் என மேலும் மேலும் பேசி தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறார்கள் என திட்டி வருகிறார்கள். ஜோதிகா சூர்யாவை மும்பைக்கு கூப்பிட்டு சென்று அங்கு தன்னுடைய இஷ்டத்துக்கும் தன்னுடைய வரையறைக்குள் சூர்யாவை கொண்டு வந்து அவரை ஒரு பொம்மை போல் ஆக்கிவிட்டார்.
இப்படியே போனால் சூர்யா தொடர்ந்து தோல்விகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் சென்று பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க போகிறேன் என சூர்யா இறங்குவது மிகப்பெரிய தவறு. அவர் இதோடு நிறுத்திவிட்டு தன்னிச்சையாக கதைகளை தேர்வு செய்வது நடித்தால் மட்டுமே கேரியரை மீட்டெடுக்க முடியும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.
மேலும் சூர்யா ஜோதிகாவால் தான் இவ்வளவு பெரிய தோல்வியும் அவமானத்தையும் சந்தித்திருக்கிறார். அந்த மன நெருடலில் தான் ஜோதிகா சூர்யாவுக்கு சப்போர்ட் செய்வதாக கூறி தன் பங்கிற்கு எதையோ பேசி சரி செய்ய பார்க்கிறார் என்றெல்லாம் மோசமாக விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.