தளபதியின் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் தேவயானிக்கு பதிலாக ஜோதிகாவா?? வெளியான புகைப்படம்!!

1 November 2020, 1:03 pm
Quick Share

தளபதி விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ்கண்ணா மற்றும் தேவயானி ஆகியோரது நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ப்ரண்ட்ஸ். இத்திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது.

இத்திரைப்படத்தின் முதல் பாகம் மிகவும் கலகலப்பாக சென்றாலும் இரண்டாவது பாகத்தில் பாசம், நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் நேசமணி கதாபாத்திரத்தை நம்மால் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் ப்ரண்ட்ஸ் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு பிரத்யேக புகைப்படமானது தற்போது வெளியாகி உள்ளது. அதில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும் சூர்யாவிற்கு ஜோடியாக சுவலட்சுமியும் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவர்கள் இருவரும் மாற்றப்பட்டு தேவயானி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் படக் குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை இருப்பினும் தேவயானி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நெட்டிசன்கள் பேசிவருகிறார்கள்.

ஏன் என்றால் 2000வது ஆண்டில் தளபதி விஜய் மற்றும் ஜோதிகாவின் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ப்ரண்ட்ஸ் திரைப்படத்திலும் இணைந்திருந்தால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருந்திருக்காது என பேச்சு எழுந்துள்ளது.

Views: - 35

0

0