தமிழ் சினிமாவில் வெளிவந்த பேய் படங்களுக்கே தலைவர் ” சந்திரமுகி’ படம் தான். 2005ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மரணபீதியிலும் மகழ்ச்சி அடையவைத்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனையை படைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியாகியது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக வெளியான ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.
ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருந்தார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக வெளிவந்த இந்த திரைப்படத்தை ஜி.கே. எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருந்தது.
அதிக பொருட்செலவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளிடையில் உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த இப்படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் கலா மாஸ்டர் பரதநாட்டிய நடனத்திற்கு நடன இயக்குனராக பணியாற்றினார். அதன் அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கலா மாஸ்டர்.
எனக்கு சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தது தான் மிகவும் சவாலாக இருந்தது. ஆனால், ஜோதிகா நன்றாக புரிந்துக்கொண்டு சிறப்பாக ஆடிவிட்டார். கலா மாஸ்டர் ஜோதிகாவை வச்சி இப்படி ஒரு பாட்டு எடுக்குறாங்களே அவங்க ஆடுவாங்களான்னு என் காதுபட பல பேர் பேசினாங்க…? அவ்வளவு ஏன் ஜோதிகாவே ரிகர்சல் பார்த்திட்டு கலா இது என்னால பண்ண முடியுமான்னு பயந்து கேட்டாங்க. ஆடுவாங்களான்னு கேட்டவங்க எல்லாருமே இப்படி ஆடிட்டாளேன்னு வியந்து பாராட்டினாங்க. எனவே எனக்கு அது தான் மிகவும் சவாலாக இருந்தது என கலா மாஸ்டர் அந்த பேட்டியில் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.