அந்த படம் ஏன் ஓடல தெரியுமா?.. விஜய்யை சீண்டிய பிரபல தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.

இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது.

இதனிடையே, படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று லீக் ஆனது. அது என்னவென்றால், தற்போது இந்த படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை கொண்டு வர இருக்கிறார்கள்.

இதற்காக கேப்டன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வெங்கட் பிரபு கேட்டு இருக்கிறார். கேப்டன் வரும் காட்சிகளை படத்தின் ரிலீஸ்க்கு முன்னரே தங்களுக்கு காட்ட வேண்டும் என்று மட்டும் கேப்டன் குடும்பத்தினர் நிபந்தனை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இனிவரும் நாட்களுக்கு படம் குறித்த நிறைய அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் பிளான் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விஜய் நடித்த பிகில் படம் ஓடாததற்கு காரணம் என்ன என தயாரிப்பாளர் கே ராஜன் பேசியிருக்கிறார். அதில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஏன் ஒடுகிறது. கதை அதுதான் காரணம், கதைக்காக நல்ல ஹீரோவை தேர்ந்தெடுக்க வேண்டும். கதை தான் ஹீரோ ஆனால், இங்கே ஹீரோக்காக கதையை தேடுகிறார்கள். இந்தியில் Chak De India என்ற பெயரில் படம் எடுத்தார்கள், நன்றாக ஓடியது. ஃபுட்பால் கதையாக மாற்றி பிகில் படத்தை எடுத்தார்கள். அதற்கு ஆயிரம் கோடி செலவு. ஆனால், அந்த படம் அந்த அளவிற்கு ஓடவில்லை. ஏனென்றால், ஹீரோக்காக கதை எழுதுவதை விட்டுவிட்டு கதைக்காக ஹீரோவை தேடுங்க எனக்கே ராஜன் பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

10 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

11 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

11 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

12 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

13 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

13 hours ago

This website uses cookies.