அழகு தேவதைகள்..! இணையத்தை கலக்கும் நயன்தாரா சமந்தா புகைப்படம்..

Author: Rajesh
23 February 2022, 11:08 am
Kathu Vakkula rendu kathal -updatenewsw360-1
Quick Share

நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டைட்டானிக் பட பாணியில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா இருவருடன் நின்றபடி போஸ் கொடுத்த போஸ்டரும் வைரலாகியது. இந்த நிலையில், இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் கட்டிப்பிடித்து வருவது போன்ற புகைப்படத்தினை விக்னேஷ் வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு தேவதைகள் அழகாக நடந்து வருகின்றது என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 878

0

0