14 வயதில் கடல் படத்தில் நடித்த துளசி.! இப்போ உடல் எடை கூடி எப்படி இருக்காங்க பாருங்க.!

19 January 2021, 12:48 pm
Quick Share

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை துளசி நாயர். இவர், கோ படத்தில் நடித்த கார்த்திகாவின் சகோதரியும் மற்றும் நடிகை ராதாவின் மகளும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்க வந்த புதிதில் அவருக்கு வயது 14 மட்டுமே என்றார்கள். இவர், நிஜமாகவே, இந்த பொண்ணுக்கு 14 வயசு தானா என்று ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

தனது முதல் படமான கடல் படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். கௌதம் கார்த்திக்கின் கடல் படத்தை தொடர்ந்து ஜீவாவின் ‘யான்’ படத்திலும் நடித்தார் ஆனால், யான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. அதன் பின்னர் பட வாய்ப்புகளும் இவருக்கு இல்லை. 14 வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் படிப்பை தொடரமுடியாமல் திணறினார். இதனால் நடிப்புக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு படிப்பின் மீது கவனம் செலுத்த தொடங்கினார். தனது படிப்பை முடித்து விட்டு நடிக்க வரலாம் (ஆனால் நடிப்பு வரணுமே ) என்று படிப்பில் கவனம் செலுத்து சென்றுவிட்டார். தற்போது தனது கல்லூரி படிப்பை படித்து வருகிறார் .

நீண்ட நாட்களாக துளசி குறித்த செய்திகள் எதுவும் வராமல் இருந்த நிலையில் தற்போது அவரது புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் துளசி தானா இந்த பெண் என அதிர்ச்சி அடைந்து கமெண்டுகளை தட்டி விடுகின்றனர்.

Views: - 0

0

0