40 வயதில் குழந்தை… மகிழ்ச்சியில் விஜய் டிவி பிரபல நடிகை: இன்ஸ்டாவில் போட்ட பதிவு!!

Author: Vignesh
31 October 2022, 4:00 pm
Vijay Tv Sunitha- Updatenews360
Quick Share

40 வயதில் விஜய் டிவி சீரியல் நடிகை தாயாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்யாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியலில் ஒன்று காதலிக்க நேரமில்லை. இந்த தொடர் 2007 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் பிரஜின், சந்திரா, ஸ்ரீநாத், அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் நரேன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த சீரியல் இளைனர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு இருந்தது.

CHANDRA - updatenews360

மேலும், இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை சந்திரா லக்ஷ்மண். இவர் மலையாள நடிகை ஆவார். இருந்தாலும், காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல சீரியல்களில் நடித்திருந்தார். அதிலும், இவர் கோலங்கள், மகள், சொந்த பந்தம், பாசமலர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான மனசெல்லாம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் மலையாளம், தமிழ் என பிறமொழி படங்களிலும், தொடர்களிலும் நடித்து இருந்தார். பிறகு தமிழில் வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை என்றவுடன் இவர் மலையாள தொடரில் கவனம் செலுத்தி வந்தார்.

CHANDRA - updatenews360

மேலும், சந்திரா அவர்கள் மலையாளத்தில் ஸ்வந்தம் சுஜாதா என்ற சீரியலில் நடித்த நடிகர் டோஷூ என்பவரை காதலித்தார். இதனை அடுத்து சந்திரா அவர்கள் தன்னுடைய 38 வயதில் நடிகர் டோஷூவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்புதான் சந்திரா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இதற்கு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

CHANDRA - updatenews360

இந்த நிலையில் சந்திராவிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சந்திரா- டோஷூ கிறிஸ்டி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையை கையில் பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை சந்திரா தன்னுடைய இன்ஸ்ட்டாவில் பகிர்ந்து, கடவுளுக்கு நன்றி! எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். இவரின் பதிவை பார்த்து ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 415

0

0