தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்த காஜல் அகர்வால், 2020 ஆம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு நீல் என்ற ஆண் குழந்தையும் உண்டு. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக இணையத்தில் செய்திகள் தீயாக பரவியது. இந்த நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
“நான் விபத்தில் சிக்கியதாக கூறும் சில அடிப்படையற்ற செய்திகளை கண்டேன். உண்மையில் இச்செய்திகள் முற்றிலும் பொய்யானவை. கடவுளின் அருளால் நான் முற்றிலும் நலமோடு இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.
இது போன்ற தவறான செய்திகள் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். இவ்விளக்கம் மூலம் காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழில் கடைசியாக “இந்தியன் 2” படத்தில் நடித்திருந்தார் காஜல் அகர்வால். இதனை தொடர்ந்து “இந்தியன் 3” படத்திலும் நடித்துள்ளார். மேலும் “இராமாயணா” திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.