காஜல் அகர்வால் சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும்..! இவ்ளோ ஆர்வமா…?

By: Udayaraman
20 June 2021, 4:53 pm
Quick Share

பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. ஹாட்ஸ்டாரில் லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் நடித்தார்.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் இணையத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். விரைவில் குழந்தை எப்போது என எல்லாரும் கேட்டு வருகின்றனர். அவரது தங்கை நிஷா அகர்வாலும் தொடர்ந்து கேட்டு வருகிறார்.

காஜலை போல இவரும் நடிகைதான், ஆனால் நடிப்பில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. விமலுடன் இஷ்டம் என்ற படத்தில் நடித்தார். எதுவும் தேறவில்லை என்று தெரிந்ததும் திருமணம் செய்து கொண்டு குழந்தையை பெற்று செட்டிலாகி விட்டார்.

இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கும் இவர், காஜல் அகர்வாலை சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறி வருகிறார். காஜல் சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் என் மகனுக்கு கம்பெனி கிடைக்காது. அவனுக்கு இப்போதே மூன்று வயது ஆகிறது. அதனால் சீக்கிரம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசையோடு கூறி வருகிறார்.

Views: - 741

21

12