பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.
பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.
சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மகன் பிறந்துள்ளதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள். காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து கடைசியாக ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்தார்.
தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் அவ்வப்போது போட்டோஸ் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் பாலிவுட் சினிமா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ” தான் விரும்பும் சுற்றுச்சூழல், நெறிமுறைகள், ஒழுக்கம் ஆகியவற்றை தென்னிந்திய சினிமாவில் இருக்கிறது. ஆனால் இந்த விஷயம் ஹிந்தி சினிமாவில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.