சூப்பர் ஸ்டாரால் மணிரத்தினம் பட வாய்ப்பை இழந்த கனவு கன்னி.. எந்த படம் தெரியுமா?..
Author: Vignesh9 August 2024, 2:32 pm
1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே. இந்த திரைப்படத்தில், ஷாருக்கான் மற்றும் கஜோல் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த நேரத்தில், பாலிவுட்டில், டாப் ஜோடியான ஷாருக்கானும், கஜோலும் கொண்டாடப்பட்டனர்.
அந்த நேரத்தில், ராஜூ மேனன் இயக்கத்தில், மின்சார கனவு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாக இருந்தார் கஜோல். பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமிழ்நாட்டிலும் இவரது பெயர் ரீச் ஆகி இருந்தது. அந்த நேரத்தில், தமிழ், ஹிந்தியில் ஷாருக்கான் வைத்து ஒரு படத்தை எடுக்க இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டிருந்தார்.
ஹிந்தியில், தில்சே எனவும் தமிழில் உயிரே எனவும் பெயரிடப்பட்ட அந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கஜோலை நடிக்க வைக்க மணிரத்தினம் முடிவு செய்திருந்தார். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு கஜோலுக்கு போன் செய்த மணிரத்தினம் அந்த நேரத்தில் ஷாருக்கான் இப்படி அடிக்கடிக்கு போன் செய்து குரலை மாற்றி பேசி கஜோலிடம் வம்பு இழுப்பதும் உண்டாம்.
அந்த வகையில், மணிரத்தினம் ஃபோன் பண்ணியதும் ஷாருக்கான் தான் கலாய்க்கிறார் என்று நினைத்து காமெடி பண்ணாதீங்க என்று போனை கட் செய்துவிட்டாராம். இதனால், கடுப்பான மணிரத்தினம் உயிரே படத்தில் ஹீரோயினாக நடிக்க மனிஷா கொய்ராலாவை நடிக்க வைத்துள்ளார்.