ரஜினிக்கு கூட இது போன்று ஓபனிங் சாங் இல்லை:தனுஷை புகழ்ந்த கலைப்புலி எஸ் தாணு!

24 February 2021, 9:09 pm
Quick Share

கர்ணன் படத்தின் ஓபனிங் சாங்கைப் பார்த்து பிரமித்து போன தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்தாணு தனுஷை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தி உருவாகியுள்ள கர்ணன் பட த்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்தப் பட த்தில் தனுஷுடன் இணைந்து லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், ரஜிஷா விஜயன், கௌரி கிஷான், லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமௌலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியானது. கண்டா வரச்சொல்லுங்க என்ற அந்த பாடல் லிரிக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், கர்ணன் படத்தின் இறுதி தொகுப்பு மொத்தமும் ரெடியாகியுள்ளது. இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பார்த்துள்ளார். அதன் பிறகு அவர் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் வரும் தனுஷின் இன்ட்ரோ சாங் இதுவரை தனுஷின் படங்களில் இல்லாத வகையில் இந்தப் படத்தில் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன், தனுஷின் மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கே இது போன்று ஒரு ஓபனிங் சாங் இருந்திருக்காது. அப்படியொரு பாடல் தனுஷிற்கு இந்தப் படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவருக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜை வெகுவாக பாராட்டியுள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையப்படுத்தி கர்ணன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்டரை வைத்து பார்க்கும் போது குதிரை தொடர்பான காட்சிகளும் மற்றும் தனுஷ் ஜெயிக்கு போவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கர்ணன் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 834

2

0