தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இசை குரலால் பலரது அன்பை பெற்றவர் பிரபல பாடகி கல்பனா. இவர் தெலங்கானா மாநிலம் ஐதாராபாத் நிஜாம்பேட்டையில் வசித்து வருகிறார்.
இவரது கணவர் பிரசாத் சென்னையில் இருந்துள்ளார். இவரது மூத்த மகள் கேரளாவில் உள்ள நிலையில் மகளை ஐதராபாத்திற்கு வரும்படி கல்பனா அழைத்துள்ளார். ஆனால் அவரது மகள் ஐதராபாத் வரமாட்டேன் கேரளாவில் தான் வசிப்பேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை 4 மணி அளவில் கல்பனா மன அழுத்தம் குறைக்க புத்துணர்ச்சிக்காக அவ்வப்போது பயன்படுத்தும் மாத்திரையை அதிக அளவில் உட்கொண்டுள்ளார்.
இதனால் சுயநினைவை இழந்து மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது கணவர் பிரசாத் சென்னையில் இருந்து மாலை 4.30 மணிக்கு பலமுறை போன் செய்துள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் போன் எடுக்காததால் கல்பனா வசிக்கக்கூடிய குடியிருப்பு சங்கச் செயலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் எந்தவித பதிலும் வராததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குட்கட்பள்ளி போலீசார் ஜன்னல் வழியாக பார்த்தும் எந்தவித தடயங்களும் கிடைக்காதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்பொழுது படுக்கை அறையில் தூங்கிய நிலையில் கல்பனா சுயநினைவை இழந்து இருப்பதை பார்த்த போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தோழியும், சக பாடகியுமான சுனிதா
மருத்துவமனையில் டாக்டர்கள் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து அவர் உண்ட மாத்திரைகளை வீரியத்தை குறைக்க சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பிறகு கல்பனா சுயநினைவு திரும்பினார். இதனை அடுத்து டாக்டர்கள் அவரிடம் பேசினர்.
இதனையடுத்து வென்டிலேட்டர் அகற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு கல்பனா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அபாய கட்டத்தை தாண்டி இருப்பதாகவும் விரைவில் அவர் சகஜ நிலைக்கு திரும்புவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் போலீசார் கல்பனாவிடம் நடந்த விவரங்களை கேட்டு அறிய உள்ளனர். கல்பனா தற்கொலை செய்யும் எண்ணத்தில் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என கல்பனாவிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.