நெட்டிசன்களுக்கு தீனி போட்ட இந்தியன் 2… 105 வயது தாத்தாவா? பயங்கரமா LOGIC இடிக்குதே!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.

இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த முறை கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் கமல் ஹாசன் பெண் வேடமிட்டு ஒரு ரோலில் நடிக்கிறாராம். அந்த ரோல் படத்தின் கதைக்கு மிகவும் அழுத்தமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

கமல் ஏற்கனவே அவ்வை ஷண்முகி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் லேடி கெட்டப்பில் நடித்திருந்தார். அந்த படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. எனவே இந்தியன் 2 படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும். சங்கர் தரமான சம்பவம் செய்திருப்பார் என யூகிக்கமுடிகிறது. எனவே படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தார்.

இந்தியன் 2 மட்டுமின்றி இந்தியன் 3 வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளிவந்தது. இதனிடையே, இந்தியன் முதல் பாகத்தில் எப்படி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை சேனாதிபதி தண்டித்தாரோ அதேபோல், தற்போது இரண்டாவது பாகத்திலும் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் என்பது வீடியோவை பார்க்கையில் தெரிகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் சேனாதிபதி கதாபாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 105 வயது ஆகிறது. இந்தியன் படத்தின் கதையின் படி சேனாதிபதி கதாபாத்திரம் 1918 ஆம் ஆண்டு பிறந்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர் என்பதெல்லாம் அனைவரும் அறிவோம். இப்படி இருக்கையில், ரசிகர்கள் பலரும் சேனாதிபதிக்கு 105 வயது ஆகிறது இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து இயக்குனர் சங்கர் விரைவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Poorni

Recent Posts

நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…

வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…

37 minutes ago

படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு நடிக்க முடியாது.. படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்!

பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…

50 minutes ago

6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்

தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி  விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…

1 hour ago

நீ நடிகனாக இருக்கவே லாயக்கி இல்ல.. யோகி பாபுவை மேடையில் விட்டு விளாசிய தயாரிப்பாளர்!

விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…

2 hours ago

ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலையும் அமைச்சர்கள் ; CM சிறை செல்வார்.. அனல் பறக்க விட்ட பாஜக பிரமுகர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…

2 hours ago

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

16 hours ago

This website uses cookies.