கமல் வைத்த பர்த்டே பார்டியில் பங்கேற்ற 36 வயது நடிகை : நடனமாடி கொண்டாடிய போட்டோஸ் இணையத்தில் வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan7 நவம்பர் 2022, 5:31 மணி
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படக்குழு சார்பில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
மேலும் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவை தனது திரையுலக நண்பர்களுடன் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பிந்து மாதவி, நடிகர் கமலுடன் நடனம் ஆடும் புகைப்படத்தை பகிர்ந்து “கமல்ஹாசன் சார் நீங்கள் ஒரு உண்மையான ஜென்டில்மேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார்” என பிந்து மாதவி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் பார்த்திபன், நடிகர் எஸ்.ஜே. சூர்யா கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
நடிகர் எஸ்.ஜே. சூர்யா, தனது டிவிட்டர் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துகள் லெஜண்ட்.. மிகச் சிறந்த வருடமாக அமைய வாழ்த்துகள் சார். நாயகன் மீண்டும் வர்றார்” என பிறந்தநாள் பார்ட்டியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழத்தியுள்ளார்.
மேலும் நடிகர் பார்த்திபன், தனது முகநூல் பக்கத்தில், “நீங்க படிக்க நான் சில புத்தகம் தருவதிலிருந்தே நீங்க புரிஞ்சிக்கலாம்,நான் இன்னும் உங்களை முழுசா படிச்சி முடிக்கலன்னு!”சொல்லிக் கொடுத்தேன்.
அள்ளிக்கொடுத்தார் அன்பை!” என கமலுடன் பிறந்தநாள் பார்ட்டியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழத்தியுள்ளார்.
0
1