உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள். இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் இன்று இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 படம் தயாராகி உள்ளது. கமலஹாசன் காஜல் அகர்வால் ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பெரும்பாலானோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இன்று இப்படம் வெளியாகி படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் லைஃப் அப்டேட் கொடுத்து வருகின்றனர். ரசிகை ஒருவர் ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு போட்டுள்ள பதிவில், இதுவரை ‘இந்தியன் 2’ திரைப்படம் மிகவும் நன்றாக இருந்தது. நீண்ட முடியுடன் இருக்கும் சேனாபதியின் Get-up சரியாக வரவில்லை. வலுவான இரண்டாம் பாதி தேவை என தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், ‘இந்தியன் 2 படத்தில் உத்வேகம் இல்லை, உணர்ச்சிகளின் இணைப்பு இல்லை. ஷங்கர் படம் என்பதற்கான அறிகுறியே இல்லை. உண்மையில் இது ஷங்கர் படமா? என கேள்வி எழுப்பி அதிர வைத்து உள்ளார். முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் பிரியா பவானி சங்கர், சித்தார்த் தங்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளதாகவும் பாடல் காட்சிகளில் சங்கரின் சாயல் தெரிவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், கமலின் பாடி பில்டர் சண்டை அவ்வளவாக எடுபடவில்லை. இந்தியன் 3 ட்ரெய்லர் சுவாரசியமாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.
மற்றொரு ரசிகர், “இது நிறைய கருத்துக்களை கொண்ட ஒரு அற்புதமான திரைப்படம், கமல்ஹாசன் உண்மையில் ஸ்டீல் மேனாக நிற்கிறார். இவ்வாறாக இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.