“ஆரம்பிக்கலாங்களா..” விஜய் சேதுபதியுடன் இணைந்து மிரட்டும் கமல் ! “விக்ரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

10 July 2021, 5:09 pm
Quick Share

விக்ரம் படத்தின் நடிகர்கள், நடிகைகள் யார் யார் என்று சொல்லாத நிலையில் இந்த படத்தில் 5 வில்லன்கள் கமல் உடன் மோதப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டெஸ்ட் சூட்டை லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடத்தி முடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். இதனால் உற்சாகமடைந்த கமல் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள்

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அமர்க்களமாக வெளியாகி உள்ளது. First Look போஸ்டரில் கமலோடு விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசிலை பார்த்த அனைத்து ரசிகர்களும் பிரமிப்பு அடைந்து, பரம திருப்தி என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 432

15

0