கமல் தயாரிப்பு… SK நடிப்பு… செம காம்பினேஷன் : வெளியானது மெகா அறிவிப்பு

Author: Babu Lakshmanan
15 January 2022, 6:38 pm
Quick Share

சின்னத்திரையில் திரையுலக பயணத்தை தொடங்கி, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார், பிச்சைக்காரன் பட இயக்குனர் சசியுடன் படம் என அடுத்தடுத்து பிசியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில், கமலின் ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இது குறித்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கமல்,சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட மூவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புதிய கூட்டணி குறித்த தகவலை பகிர்ந்துள்ளது.

Views: - 326

0

0