17 வருடங்கள் காத்திருந்த கமல்; ஹாலிவுட் பிரபலமும் புகழ்ந்த கதை;கிடைத்த சர்ப்ரைஸ்

Author: Sudha
8 July 2024, 6:07 pm

கமல்ஹாசன் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான். அபே என்னும் பெயரில் ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது

திரைப்படம் இயக்க 15 வருடங்கள் காத்திருந்தார் கமல்ஹாசன்.

ஆளவந்தான் கதையானது கமல்ஹாசன் எழுதி தாயம் என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு தொடர்கதை.

இதயம்பேசுகிறது இதழில் 3-7-1983 தொடங்கி வெளிவந்தது.மொத்தம் 37 வாரங்கள் இக்கதை பிரசுரமானது.

1984 இல் முடிவுற்றது கதை. அதனை 17 வருடங்கள் கழித்து 2001 ஆம் ஆண்டு சில மாறுதல்களை காலத்திற்கு ஏற்ப புகுத்தி இயக்கியிருந்தார் கமல்ஹாசன்.

அனுராக் காஷ்யப் உடனான ஒரு பேட்டியில் ஹாலிவுட் இயக்குனர் குவெண்டின் டாராண்டினோ தன்னுடைய கில் பில் படத்தின் அனிமேஷன் காட்சிகளுக்கு ஆளவந்தான் படம் தான் இன்ஸ்பிரேஷன் என தெரிவித்திருந்தார்.

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 122

    0

    0