அடடே … இத யாருமே எதிர்பார்க்கலயே! ராகவா லாரன்ஸின் “காஞ்சனா 4” ஹீரோயின் இவர்தான்!

Author:
12 செப்டம்பர் 2024, 9:57 காலை
kanchana 4
Quick Share

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு நடிப்பில் அதிக கவனத்தை செலுத்தி ஹீரோவாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருந்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கம் உள்ளிட்ட பல துறைகளில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

raghava lawrence1

இவரது இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் காஞ்சனா இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை எட்டியிருந்தது. அதை தொடர்ந்து காஞ்சனா படத்தின் 2 மற்றும் 3 உள்ளிட்ட அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி மீண்டும் ரசிகர்களை கொண்டாட வைத்தது .

இந்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இன்னும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் காஞ்சனா 4 படத்தை எடுக்கப் போவதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் காஞ்சனா படத்தின் 4வது பாகம் குறித்து தற்போதைய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த 4வது பாகத்திற்கான கதை பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டதாகவும் இந்த படத்தை இந்திய நிறுவனமான கோல்டு மைன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது .

மேலும் படிக்க: எனக்கு விருப்பமே இல்லை… ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு புகார்!

pooja hegde - updatenews360.png 2

இந்த படத்தில் முக்கிய விஷயமாக அதாவது கதாநாயகியாக நடிக்க பூஜை ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இது திரைப்படத்தில் பூஜா நடித்தால் இது அவரது மூன்றாவது தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 201

    0

    0