இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.
ராதிகா மெர்ச்சந்த் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை இந்த Pre Wedding கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில், உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக, ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழித்து நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் மற்றும் பணக்கார்கள் பலரும் வந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில், இந்த திருமண நிகழ்ச்சிக்கு மட்டும் ரூ.1000 கோடி செலவு செய்து உள்ளதால், இதை அறிந்த நெட்டிசன்கள் இதில் எத்தனை பேர் பசியை போக்கியிருக்கலாம், செலவு செய்யலாம், அதற்காக இத்தனை கோடிகள் என்பது டூ மச் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் திரையுலகின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் அம்பானி வீட்டில் வந்து நடனமாடி உள்ளனர். இந்நிலையில், நடிகை கங்கனா தைரியமாக ரூ 50 கோடி கொடுத்தாலும் அம்பானி வீட்டில் வந்து நடனமாட மாட்டேன் என்று தைரியமாக கூறி உள்ளார். எவ்ளோ தூண்டி விட்டாலும், எந்த ஒரு திருமண நிகழ்ச்சியிலும் நான் நடனமாட மாட்டேன் என்றும், குறுக்கு வழியில் எது வந்தாலும் வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.