புற்றுநோய் பாதிப்பு; மரணமடைந்த பிரபல டிவி தொகுப்பாளினி நடிகை,.வருத்தத்தில் திரையுலகம்,..

Author: Sudha
13 ஜூலை 2024, 11:24 காலை
Quick Share

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை மற்றும் தொகுப்பாளினியாக இருந்தவர் அபர்ணா.இவருக்கு வயது 51.நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அபர்ணா அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.


1984 ஆம் ஆண்டு வெளியான மஸ்ண்டா ஹுவு படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகம் ஆன அபர்ணா, அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

ஷிவா ரஜ்குமாரின் இன்ஸ்பெக்டர் விக்ரம் படத்திலும் அபர்ணாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.அபர்ணாவின் மரணம் கன்னட பொழுதுபோக்கு துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவரது ரசிகர்களும் சக நடிகர் – நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


இந்த தகவலை அவரது கணவர் நாகராஜ் வஸ்த்ரே உறுதிபடுத்தியுள்ளார். அபர்ணாவிற்கு 4-வது ஸ்டேஜ் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருந்ததாகவும் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்து விட்டதாகவும் நாகராஜ் வஸ்த்ரே கூறியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 87

    0

    0