21 வயதில் ரெண்டு குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை…ஷாக் ஆன ரசிகர்கள்..!

Author: Selvan
6 December 2024, 4:32 pm

திரையுலகில் கலைநயமும், வாழ்க்கையில் மனிதநேயமும் மிளிரும் நடிகை ஸ்ரீலீலா

கன்னட சினிமாவில் கிஸ் என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆகி பிரபலம் ஆனவர் ஸ்ரீலீலா.

தன்னுடைய நடனத்தாலும்,நடிப்பாலும் மிகக் குறுகிய காலத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பின்பு தெலுங்கில் பெல்லி சண்டாடி,ஜேம்ஸ் போன்ற படங்களில் கேமியோ ரோலில் நடித்தார்.

Sreeleela adopts differently-abled children

அதனையடுத்து பகவந் கேசரி,மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் போன்ற படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.இவர் ஆடிய குர்சி மாடதாபெட்டி பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

இதையும் படியுங்க: லக்கி பாஸ்கர் பாணியில் உருவான 5 மோசடி திரில் படங்கள்…மிஸ் பண்ணாம பாருங்க..!

தற்போது புஷ்பா 2-வில் அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.சினிமா தவிர தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை பற்றி சில வெளிவராத தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

Sreeleela's dance hits

அதாவது 2001 ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீலீலா,2022 ஆம் ஆண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.அப்போது அவருக்கு வயது 21 மட்டுமே.

மேலும் பல தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.இதனால் ரசிகர்கள் பலர் ஸ்ரீலீலாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பாராட்டி வருகின்றனர்.

  • Muthu vs Soundariya Nanjundan பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவருதான்.. கோப்பையுடன் வெளியான போட்டோ!!