சினிமா / TV

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கை தவறவிட்ட மற்றுமொரு பிரபல இயக்குனர்? அடப்பாவமே…

ஹார்ட் டிஸ்க்கை காணும்…

கடந்த 2024 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரது நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான “லால் சலாம்” திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்திரைப்படம் ரூ.90 கோடி செலவில் உருவானது. ஆனால் இத்திரைப்படம் ரூ.20 கோடியே வசூலானது. இது இத்திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது. 

இதனிடையே இத்திரைப்படத்தின் புரொமோஷன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இத்திரைப்படத்தின் பல Footages அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்துப்போய்விட்டதாக கூறினார். இவர் இவ்வாறு கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் ட்ரோலுக்குள்ளாக்கவும்பட்டது. 

ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த மற்றொரு இயக்குனர்

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து மற்றுமொரு இயக்குனர் ஹார்ட் டிஸ்க்கை தவறவிட்டுள்ளதாக தகவல் வெளிவருகிறது. ஹார்ட் டிஸ்க் மட்டுமல்லாது ஹார்ட் டிஸ்க் வைத்திருந்த நபரும் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்சய் குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கண்ணப்பா”. இத்திரைப்படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இத்திரைப்படம் ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்தான் இத்திரைப்படத்தில் படமாக்கப்பட்ட முக்கியமான VFX காட்சிகளின் Footages அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை வைத்திருந்த நபர் ஒருவர் அந்த ஹார்ட் டிஸ்க்குடன் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படக்குழுவினர் அந்த ஹார்ட் டிஸ்க்கை ஃபோர் ஃபிரேம்ஸ் ஸ்டூடியோவிற்கு கொரியரில் அனுப்பிவைத்தனராம். அந்த கொரியரை பெற்ற நபர் அந்த கொரியருடன் காணாமல் போனதாக கூறுகின்றனர். இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ள நிலையில் போலீஸார் அந்நபரை வலைவீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

மன்னிப்பு கேட்கலைனா இவ்வளவு கோடி நஷ்டம்? மொழி விவகாரத்தில் ரிஸ்க் எடுக்கும் கமல்ஹாசன்?

மன்னிப்பு கேட்கமாட்டேன் “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்ட நிலையில் அவரை குறித்து…

9 hours ago

எதிர்க்கட்சியாக வரக்கூட திமுகவுக்கு வாய்ப்பில்லை? பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு!

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சக்கரம் போல் சுழன்று தேர்தல் பணிகளை…

10 hours ago

கனவு நிறைவேறப்போகும் தருணத்தில் பிரிந்த உயிர்? ராஜேஷ் மகனுக்கு நடக்கவிருந்த சுப நிகழ்ச்சி! ஆனால் கடைசில?

அதிர்ச்சியில் திரையுலகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ், இன்று உடல்நிலை சரியில்லாத…

11 hours ago

ராஜேஷின் மரணத்திற்கு இந்த நபர்தான் காரணமா? பகீர் கிளப்பிய சகோதரரின் பேட்டி!

ராஜேஷ் மரணம்  இன்று காலை தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவமாக அமைந்துள்ளது நடிகர் ராஜேஷின் மரணச் செய்தி. கிட்டத்தட்ட…

12 hours ago

ராஜேஷின் கடைசி ஆசை இதுதான்? அதுக்குள்ள இப்படியா ஆகணும்!

திடீர் மரணம் கே பாலச்சந்தரின் “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தின் மூலம்  சினிமாவிற்குள் அறிமுகமான ராஜேஷ், “கன்னிப் பருவத்திலே” திரைப்படத்தில்…

13 hours ago

சரிகமப ஆடிஷனில் பிரபல நடிகையின் மகள்… மேடையில் கண்ணீர் விட்டு கதறிய பிரபலம்!!

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோக்கள் நிறைய இருந்தாலும், சரிகமப நிகழ்ச்சி தனி ரசிகர்கள் படை உண்டு. காரணம்,…

13 hours ago

This website uses cookies.