கரண் ஜோகர்ரே வியந்து பாராட்டிய “மின்னல் முரளி”: டோவினோவிற்கு அனுப்பிய WhatsApp மெசேஜ் வைரல்!!
Author: Aarthi Sivakumar10 January 2022, 12:42 pm
நடிகர் டோவினோ தாமஸின் ‘மின்னல் முரளி’ படத்துக்கு பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பேசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மின்னல் முரளி’. சூப்பர் ஹீரோக்களின் கதையை களமாக கொண்ட இப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்திய பிரபலங்கள், ரசிகர்கள் பலர் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹர் டோவினோ தாமஸிடம் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இப்படத்தின், நடிகர் டோவினோ தாமஸ் கரன் ஜோகர் வாட்ஸ்அப்பில் பாராட்டு தெரிவித்ததை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கரண் ஜோஹர் அனுப்பிய செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,
ஹேய் டொவினோ, ‘நேற்று இரவு ‘மின்னல் முரளி’ படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டு, பொழுதுபோக்கு விகிதம் படம் முழுக்கத் தக்கவைக்கப்பட்டுள்ளன. தனித்துவமான ஒரு சூப்பர் ஹீரோ படம். நிச்சயமாக நீங்கள் அபாரமாக நடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்’ என பாராட்டியுள்ளார்.
0
0